கறுப்பு பணத்தைக் கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிர முயற்சி : பிரணாப்
கறுப்பு பணத்தைக் கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிர முயற்சி : பிரணாப்
கறுப்பு பணத்தைக் கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிர முயற்சி : பிரணாப்
ADDED : ஜூலை 27, 2011 05:27 PM
புதுடில்லி : வெளிநாடுகளில், இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை நாட்டிற்கு கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிர முயற்சி காட்டி வருவதாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, தலைநகர் டில்லியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதாவது, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் குறித்த விபரங்களை சட்டப்பூர்வமாக, சம்பந்தப்பட்ட நாடுகளிடமிருந்து பெற திட்டமிட்டிருப்பதாகவும், இதன்மூலமாகத் தான், கறுப்புப் பணத்தை முழுவதுமாக இந்தியாவிற்கு கொண்டுவர முடியும் என்று தாங்கள் நம்புவதாக அவர் தெரிவித்தார்.