/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரியில் பேனர், கட் அவுட்டுக்கு முற்றுப்புள்ளிபுதுச்சேரியில் பேனர், கட் அவுட்டுக்கு முற்றுப்புள்ளி
புதுச்சேரியில் பேனர், கட் அவுட்டுக்கு முற்றுப்புள்ளி
புதுச்சேரியில் பேனர், கட் அவுட்டுக்கு முற்றுப்புள்ளி
புதுச்சேரியில் பேனர், கட் அவுட்டுக்கு முற்றுப்புள்ளி
ADDED : ஆக 11, 2011 02:53 AM
புதுச்சேரி:புதுச்சேரியில் பேனர், கட் அவுட் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி
வைக்க வேண்டும் என மா.
கம்யூ., வலியுறுத்தி உள்ளது.இதுகுறித்து
மா.கம்யூ., தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் முருகன், செயலாளர் பெருமாள்
ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சுனாமி நிவாரண நிதியாக பெறப்பட்ட
771.73 கோடி ரூபாய் முறையாக செலவிடப்படவில்லை. சுனாமி நிதி குறித்த வெள்ளை
அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்ற மா.கம்யூ., கோரிக்கை காற்றில் பறக்க
விடப்பட்டது.சென்டாக்கில், கடந்த ஆண்டு வெங்கடேஸ்வரா மருத்துவக்
கல்லூரிக்கு மருத்துவக் கவுன்சிலின் அனுமதி கிடைக்காததால் முதல் ஆண்டில்
சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரி அரசு தலையிட
வேண்டும். சென்டாக் அட்மிஷன் வெளிப்படையாக நடக்க வேண்டும். புதுச்சேரியில்
விளம்பரத் தட்டிகள் பொதுப்பிரச்னைகளை வலியுறுத்துவதாக இருந்தால் மா.
கம்யூ., வரவேற்கும். ஆனால் தனி நபருக்காக வைக்கப்படும் கட் அவுட், பேனர்களை
தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். ராஜாங்கம் உடனிருந்தார்.