/உள்ளூர் செய்திகள்/திருச்சி/கம்பரசம்பேட்டை துணைமின் நிலையம் பராமரிப்பு: திருச்சியில் இன்று குடிநீர் "கட்'கம்பரசம்பேட்டை துணைமின் நிலையம் பராமரிப்பு: திருச்சியில் இன்று குடிநீர் "கட்'
கம்பரசம்பேட்டை துணைமின் நிலையம் பராமரிப்பு: திருச்சியில் இன்று குடிநீர் "கட்'
கம்பரசம்பேட்டை துணைமின் நிலையம் பராமரிப்பு: திருச்சியில் இன்று குடிநீர் "கட்'
கம்பரசம்பேட்டை துணைமின் நிலையம் பராமரிப்பு: திருச்சியில் இன்று குடிநீர் "கட்'
ADDED : ஆக 09, 2011 01:17 AM
திருச்சி: கம்பரசம்பேட்டை துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி
நடைபெறுவதால், திருச்சி மாநகராட்சி பகுதியில் இன்று ஒருநாள் குடிநீர்
விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.இதுகுறித்து திருச்சி மாநகராட்சி
கமிஷனர் வீரராகவ ராவ் அறிக்கை:திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட
கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல்
நிலையம், அய்யாளம்மன் படித்துறை, பொன்மலை கூட்டுக்குடிநீர் திட்ட தலைமை
நீரேற்று நிலையம் மற்றும் ஜீயபுரம், பிராட்டியூர் கூட்டு குடிநீர் திட்டம்
நிலையம் ஆகிய இடங்களில் உள்ள தலைமை நீரேற்று நிலையங்களுக்காக உள்ள
கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் ஆக., 9ம் தேதி (இன்று) பராமரிப்பு
பணி நடைபெற உள்ளது.கம்பரசம்பேட்டை நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் மரக்கடை,
விறகுப்பேட்டை, உறையூர், மலைக்கோட்டை, சிந்தமாணி ஆகிய பகுதிகளிலும்,
பெரியார்நகர் கலெக்டர்வெல் நிலையத்தில் அடங்கும் தில்லைநகர், அண்ணாநகர்,
புத்தூர், காஜாப்பேட்டை, கண்டோன்மென்ட், ஜங்ஷன், உய்யகொண்டான் திருமலை,
தெற்கு ராமலிங்கநகர், கருமண்டபம், காஜாமலை, மேலகல்கண்டார்கோட்டை,
பொன்னேரிபுரம், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம், பொன்மலைப்பட்டி,
மத்திய சிறை, சுப்ரமணியபுரம், விமானநிலையம், செம்பட்டு, கல்லுக்குழி,
காஜாநகர், காஜாமலை, கிருஷ்ணமூர்த்திநகர், தொண்டைமான்நகர், அன்புநகர் ஆகிய
பகுதிகளிலும், பிராட்டியூர் கூட்டுகுடிநீர் திட்டத்தில் அடங்கும்
ராம்ஜிநகர் பிராட்டியூர், எடமலைப்பட்டிபுõர், கே.கே.,நகர், எல்.ஐ.சி.,
காலனி, விஸ்வநாதபுரம், கே.சாத்தனூர், தென்றல்நகர், விஸ்வாஸ்நகர்,
ஆனந்த்நகர், சுப்ரமணியநகர் ஆகிய பகுதிகளில் ஒருநாள் மட்டும் குடிநீர்
வினியோகம் இருக்காது.வரும் 10ம் தேதி (நாளை) வழக்கம்போல் குடிநீர்
விநியோகம் செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


