/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/வடக்குகாரசேரி கோயில் மாட்டுவண்டி போட்டி : கடம்பூர் வண்டிக்கு முதல் பரிசுவடக்குகாரசேரி கோயில் மாட்டுவண்டி போட்டி : கடம்பூர் வண்டிக்கு முதல் பரிசு
வடக்குகாரசேரி கோயில் மாட்டுவண்டி போட்டி : கடம்பூர் வண்டிக்கு முதல் பரிசு
வடக்குகாரசேரி கோயில் மாட்டுவண்டி போட்டி : கடம்பூர் வண்டிக்கு முதல் பரிசு
வடக்குகாரசேரி கோயில் மாட்டுவண்டி போட்டி : கடம்பூர் வண்டிக்கு முதல் பரிசு
ADDED : ஆக 05, 2011 02:08 AM
செய்துங்கநல்லூர் : தெய்வச்செயல்புரம் அருகே வடக்குகாரசேரி கிராமத்தில் அமைந்துள்ள சுடலைமாடசுவாமி கோயில் கொடைவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டிபோட்டிகள் நடந்தது.விழாவில் மூன்று நாட்கள் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
நான்காம் நாள் காலை மாட்டு வண்டிப் போட்டிகள் நடந்தது. இரண்டு பிரிவுகளாக நடந்த இப்போட்டிகளில் கடம்பூர், பத்மநாபமங்களம், மருகால்குறிச்சி, மீனாட்சிபுரம், தெற்கு காரசேரி, தளவாய்புரம், செக்காரகுடி, புதூர் பாண்டியபுரம், வடக்கு காரசேரி உட்பட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டது. இக்கிராமத்திலிருந்து கோனார்குளம் கிராமம் வரை சுமார் 8 மைல் தூரம் சென்று திரும்ப வேண்டும் என்ற நிபந்தனையில் நடந்தது. பெரிய மாட்டு வண்டிப் போட்டியில் மொத்தம் 10 பேர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற கடம்பூர் ஜமீன்தார் வண்டிக்கு முதல் பரிசினை வடக்கு காரசேரி கேபிள் விஷன் உரிமையாளர் முரளி தேவேந்திரன் வழங்கினார். ஆள் இல்லாமல் சென்று பின் சாரதி உதவியுடன் கச்சேரி தளவாய்புரம் வண்டிக்கு இரண்டாவது பரிசினை தூத்துக்குடி ஜெயராம் மற்றும் ஜெயஜோதி வழங்கினர். பத்மநாபமங்கலம் வண்டிக்கு மூன்றாம் பரிசினை வடக்கு காரசேரி பஞ்.,தலைவர் கணேஷ் நாராயணன் வழங்கினார். இதே போல் சிறிய மாட்டு வண்டி போட்டிக்கு இக்கிராமத்திலிருந்து கோனார்குளம் பிரிமியல் மில் வரை சுமார் 5 மைல் தூரம் சென்று திரும்ப வேண்டும் என்ற நிபந்தனை வைக்கப்பட்டது. இதில் மொத்தம் 21 பேர் கலந்து கொண்டனர். இதில் முதல் பரிசு பெற்ற கடம்பூர் ஜமீன்தார் வண்டிக்கு முதல் பரிசினை கருங்குளம் யூனியன் சேர்மன் கோசல்ராம் வழங்கினார். இரண்டாம் பரிசு பெற்ற மருகால்குறிச்சி வண்டிக்கு ஸ்ரீவைகுண்டம் கல்லூரி தமிழாசிரியர் முருகன் பரிசினை வழங்கினார். மூன்றாம் பரிசு பெற்ற பத்மநாபமங்கலம் வண்டிக்கு கணேஷன் பரிசினை வழங்கினார்.போட்டிகளை முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். முதல் இடத்தை பெற்ற வண்டி சாரதிகளுக்கு பஞ்.,எழுத்தர் முருகன் குத்து விளக்கு பரிசு வழங்கினார். போட்டிகளுக்கு ஊர் நாட்டாமை ராசையா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் நிலக்கிழார் மூக்கன், ராஜமணி, நயினார், மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.