/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாவட்டத்தில் 1.32 லட்சம் பேருக்கு இலவச பொருட்கள்: அமைச்சர்மாவட்டத்தில் 1.32 லட்சம் பேருக்கு இலவச பொருட்கள்: அமைச்சர்
மாவட்டத்தில் 1.32 லட்சம் பேருக்கு இலவச பொருட்கள்: அமைச்சர்
மாவட்டத்தில் 1.32 லட்சம் பேருக்கு இலவச பொருட்கள்: அமைச்சர்
மாவட்டத்தில் 1.32 லட்சம் பேருக்கு இலவச பொருட்கள்: அமைச்சர்
ADDED : செப் 20, 2011 01:10 AM
ஆனைமலை : ''கோவை மாவட்டத்தில் உள்ள 9 லட்சத்து 65 ஆயிரம் குடும்ப
அட்டைகளில் 1 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு 2011-2102ம் ஆண்டில் இலவச
திட்டத்தின் கீழ் பொருள்கள் வழங்கப்படும்,'' என தமிழக தொழில் துறை அமைச்சர்
வேலுமணி பேசினார்.
ஆனைமலை சுற்றியுள்ள சோமந்துறைசித்தூர், துறையூர்,
ஆனைமலை ஆகிய மூன்று இடங்களில் நடந்த விழாக்களில் பயனாளிகளுக்கு பல்வேறு
நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்ட துவக்க விழா நடந்தது. இலவச லேப்டாப்,
கல்வி ஊக்கத்தொகை, மிக்ஸி, கிரைண்டர், ஆடுகள் ஆகியவை வழங்கப்பட்டது. ஆனைமலை
அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்கள் 177 பேருக்கும்,11ம்
வகுப்பு மாணவர்கள் 111 பேருக்கும் தலா 1,500 ரூபாய் வீதமும் ,12ம் வகுப்பு
மாணவர்கள் 83 பேருக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 389 பேருக்கு
கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. சோமந்துறைசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி
மாணவர்கள் 82 பேருக்கு லேப்டாப் வழங்கப்பட்டது. சோமந்துறைசித்தூரில் உள்ள
ஐந்து பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்பட்டது. துறையூரில் 165 பேருக்கு
மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டது. விழாவில், முதன்மை கல்வி
அலுவலர் ஆனந்தி வரவேற்றார். மாவட்ட கலெக்டர் கருணாகரன் தலைமை வகித்தார்.
தமிழக தொழில்துறை அமைச்சர் வேலுமணி பேசியதாவது: தமிழக மக்கள் அனைவரும்
பயன்பெறும் வகையில், தற்போதுள்ள அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு
வந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 9 லட்சத்து 65 ஆயிரம் ரேஷன்கார்டுகளில் 1
லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு 2011-2102ம் ஆண்டில் இந்த திட்டத்தின் கீழ்
பொருள்கள் வழங்கப்படும். மக்கள் பயன்பெறும் வகையில், முதல்வர் திட்டங்களை
அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்கள்
அனைத்தும் விரைவில் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும். மக்களும் அரசின்
திட்டத்தை சரிவர பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்றார். இதில்,
எம்.எல்.ஏ.,க்கள் ஜெயராமன், ஆறுமுகம், எம்.பி., சுகுமார், சப்-கலெக்டர்
அருண் சுந்தர் தயாளன், தாசில்தார் சின்னப்பையன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


