வேலை கிடைக்கும் என்றால் எல்லாரும் ஹிந்தி படிப்பர்: திருமாவளவன்
வேலை கிடைக்கும் என்றால் எல்லாரும் ஹிந்தி படிப்பர்: திருமாவளவன்
வேலை கிடைக்கும் என்றால் எல்லாரும் ஹிந்தி படிப்பர்: திருமாவளவன்

சென்னை:''ம.பி., - உ.பி., ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் தாய்மொழியை சிதைத்து, ஹிந்தி பேசும் மாநிலங்களாக மாற்றப்பட்டு விட்டன. அனைத்து மாநிலங்களையும் அப்படி மாற்ற வேண்டும் என்பதுதான் பா.ஜ., நோக்கம்,'' என வி.சி., தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
அவரது பேட்டி:
தாய் மொழியோடு ஆங்கிலத்தையும் கற்று, இரு மொழி கொள்கையில் செயல்படுவதுதான் சரியானதாக இருக்கும். இரு மொழிக் கொள்கை, இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் ஒற்றுமைக்கும் பொருத்தமானது. மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது மொழி என்பது, அவரவர் விருப்பம்.
இந்தியாவில் ஒரே மதம் என்ற நோக்கம் இருப்பதுபோல், ஒரே மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவை ஒரே தேசமாக வைத்திருக்க முடியும் என்ற எண்ணம், டில்லியில் ஆட்சிக்கு வருபவர்களின் நோக்கமாக இருக்கிறது; அதனால்தான் ஆங்கிலத்தை அன்னிய மொழி போல் வெறுப்பை பரப்புகின்றனர்.
ஹிந்தியை விரும்பி படிப்பவர்கள் படித்துக் கொண்டு இருக்கின்றனர். ஹிந்தி படித்தால் வேலை வாய்ப்பு உறுதிப்படும் என்றால், படிப்பதை யாராலும் தடுக்க முடியாது; வேலை வாய்ப்பு கிடைக்கும் எனில் , தமிழகத்தில் உள்ளவர்கள் கூட ஹிந்தி படிப்பர். ஆனால், அப்படி யாரும் இங்கு படிக்கவில்லை.
ம.பி., - உ.பி., ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் தாய்மொழியை கடுமையாக சிதைத்து விட்டனர்; ஹிந்தி பேசும் மாநிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதைபோல் நாட்டின் அனைத்து மாநிலங்களையும் மாற்ற வேண்டும் என்பது தான் பா.ஜ.,வின் நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.