கண்மணிகளுக்கு தட்டுப்பாடு : விநாயகர் சிலைகளுக்கு சிக்கல்
கண்மணிகளுக்கு தட்டுப்பாடு : விநாயகர் சிலைகளுக்கு சிக்கல்
கண்மணிகளுக்கு தட்டுப்பாடு : விநாயகர் சிலைகளுக்கு சிக்கல்
ADDED : ஆக 21, 2011 01:51 AM
தேனி : தேனி மாவட்டத்தில் 'குண்டுமணி' என அழைக்கப்படும் கண்மணிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விநாயகர் சிலைகளுக்கு கண்கள் அமைக்க மாற்று வழிகளை செய்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் செய்பவர்கள் கண்களுக்கு குண்டுமணி பொறுத்துவது வழக்கம்.
கண்மணி என பேச்சுவழக்கில் அழைக்கப்படும், இந்த குண்டுமணி கருப்பு, சிவப்பு கலரில் இருக்கும். இதனை கருவிழிகளுக்கு பதிலாக பயன்படுத்துவார்கள். பெரும்பாலும் சிறிய சிலைகளை செய்வதற்கு இந்த கண்மணிகளை பயன்படுத்துவது வழக்கம். தேனி மாவட்டத்தில் தற்போது இந்த குண்டுமணி செடி இனங்கள் அழிந்து விட்டன. இதனால் சிலை செய்பவர்கள் குண்டுமணி கிடைக்காமல், மல்லிகை இதழ்களை களிமண்ணில் பதித்து நடுவில் கருப்பு மை வைத்து சிலை செய்து வருகின்றனர். தோட்டக்கலை துணை இயக்குனர் முருகனிடம் கேட்ட போது,'குண்டுமணி ஒரு வகையான மூலிகை செடி. வேலி ஓரங்களில் வளரும். வறட்சி காரணமாக இந்த செடி இனங்கள் அழிந்து போயிருக்கலாம்,' என்றார்.