/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/போலீஸ் துறை சார்பில் ராக்கிங் விழிப்புணர்வுபோலீஸ் துறை சார்பில் ராக்கிங் விழிப்புணர்வு
போலீஸ் துறை சார்பில் ராக்கிங் விழிப்புணர்வு
போலீஸ் துறை சார்பில் ராக்கிங் விழிப்புணர்வு
போலீஸ் துறை சார்பில் ராக்கிங் விழிப்புணர்வு
ADDED : செப் 13, 2011 01:53 AM
பெருந்துறை: போலீஸ் துறை சார்பாக,ராக்கிங் விழிப்புணர்வு கூட்டம்,
பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் நடந்தது.
கல்லூரி முதல்வர் செலஸ்டின்
ராஜ்மனோகர் தலைமை வகித்தார். பெருந்துறை டி.எஸ்.பி., குணசேகரன் முன்னிலை
வகித்தார். இன்ஸ்பெக்டர் குணசேகரன் வரவேற்றார். ஈரோடு ஏ.டி.எஸ்.பி.,
செல்வராஜ் பேசினார். கல்லூரி கூடுதல் இயக்குநர் பசுபதி, துணைக்
கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேந்திரன், துணை முதல்வர் டாக்டர் சந்திரபோஸ்
மற்றும் பலர் பேசினர். பெருந்துறை மருத்துவக் கல்லூரி, கொங்கு இன்ஜினியரிங்
கல்லூரி, அறச்சலூர் நவரசம் கல்லூரி, கொங்கு பாலிடெக்னிக், மஹாராஜா
இன்ஜினியரிங் கல்லூரி, கே.எம்.ஆர். ஃபார்மஸி கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து
கொண்டனர். ராக்கிங் சம்பந்தமான புகார்களை மாணவ, மாணவியர் தெரிவிக்க
வசதியாக, அனைத்து கல்லூரிகளுக்கும் போலீஸ் துறை சார்பில் புகார் பெட்டி
வழங்கப்பட்டது.