மணிப்பூர் விவகாரத்தில் முன்னுரிமையில் கீழ் விவாதிக்க மோகன் பகவத் வலியுறுத்தல்
மணிப்பூர் விவகாரத்தில் முன்னுரிமையில் கீழ் விவாதிக்க மோகன் பகவத் வலியுறுத்தல்
மணிப்பூர் விவகாரத்தில் முன்னுரிமையில் கீழ் விவாதிக்க மோகன் பகவத் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 10, 2024 08:45 PM

புதுடில்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக முன்னுரிமையின் கீழ் விவாதிக்கப்பட வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.
மத்தியில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திரமோடி நேற்று பதவியேற்றார்.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியது,மணிப்பூர் விவகாரத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். அங்கு வன்முறையை தடுத்து நிறுத்தி நிரந்தர அமைதி நிலவ வேண்டும். இது தொடர்பாக முன்னுரிமையின் கீழ் விவாதிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.