/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கூலித் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டுகூலித் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
கூலித் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
கூலித் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
கூலித் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
ADDED : செப் 22, 2011 12:40 AM
கோவிப்பட்டி : கோவில்பட்டியில் பணம் கேட்டு மிரட்டி கூலித் தொழிலாளியை
வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில்
கூறப்படுவதாவது, கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 4 வது தெருவை சேர்ந்த
பெருமாள்பாண்டியன் மகன் மகாராஜன் (32). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.
இதே பகுதியை சேர்ந்த முதல் தெரு சண்முகையா மகன் அய்யர் என்ற மாரிமுத்து
(25). இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாகவும்,
போலீஸ் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில் மகாராஜன்
கோவில்பட்டி பார்க் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது அவரை மாரிமுத்து
வழிமறித்து தன்மீது புகார் கொடுத்ததற்காக மிரட்டியதாகவும், பணம்
கேட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் பணம் தர மறுத்த மகாராஜனை அரிவாளால்
வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மகாராஜன் கோவில்பட்டி அரசு
ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்ததுடன், மேற்கு போலீசில் புகார்
செய்தார். இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் ரவி நாராயணன் வழக்குப்பதிவு
செய்து இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விசாரணை நடத்தி மாரிமுத்துவை தேடி
வருகின்றனர்.