உ.பியில் தொடரும் கட்சி தாவும் படலம்: முலயாம்கடசி எம்.எல்.ஏக்கள் 6 பர் மாயாவதி கட்சிக்கு தாவல்
உ.பியில் தொடரும் கட்சி தாவும் படலம்: முலயாம்கடசி எம்.எல்.ஏக்கள் 6 பர் மாயாவதி கட்சிக்கு தாவல்
உ.பியில் தொடரும் கட்சி தாவும் படலம்: முலயாம்கடசி எம்.எல்.ஏக்கள் 6 பர் மாயாவதி கட்சிக்கு தாவல்
ADDED : ஆக 06, 2011 02:23 AM
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2012) சட்டமன்ற தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி கடந்த 4 மாதங்களாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களின் கட்சித்தாவும் படலம் நீடித்து வருகிறது.
நேற்று முலாயாம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.க்கள், ஆளும் பகுஜன்சமாஜ் கட்சிக்கு தாவியதால் பரபரப்பு கூடியுள்ளது. நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த சந்தியா கேதிரியா என்ற எம்.எல்.ஏ. ஆளும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு தாவினார். இவர் கிஷ்ணா சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. இவரைத் தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) கொத்தாக 6 முலயாம்சிங் கட்சி எம்.எல்.ஏ., ஆளும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு திடீரென தாவிவிட்டனர். அவர்கள் வருமாறு: சர்வேஷ்சிங் ( சாகர் தொகுதி), சுல்தான்பெர்க் (கவார் தொகுதி), அசோக்குமார்சிங் (சாந்தல் தொகுதி), சந்தீப் அகர்வால் (முர்தாபாத் தொகுதி), சுந்தர்லால் லகோதி (ஹாதா தொகுதி), சூரஜ்சிங் ஷகாய் ( கன்ஷிராம் நகர் தொகுதி) ஆகியோர் அடங்குவர்.இவர்கள் அனைவரும் அடுத்த தேர்தலில் (2012) தங்களுக்கு டிக்கெட் மறுக்கப்பட்டதன் காரணமாக கட்சி தாவியதாக கூறப்படுகிறது. ஏறத்தாழ நான்கரை ஆண்டுகள் பதவி சுகம் அனுபவித்து விட்டு கடைசி நேரத்தில் கட்சி தாவியுள்ளனர். முன்னதாக கடந்த மே மாதம் தொடங்கி இப்படி ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என எம்.எல்.ஏ.க்கள் மாறி மாறி தாவுவதால் உத்தரபிரதேச அரசியலில் தினம்தினம் பரபரப்பு கூடி வருகிறது. நேற்று கட்சி் ஆளும் கட்சிக்கு ஓடி வந்த ஆறு எம்.எல்.ஏ.க்களும் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கையில், நாங்கள் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறோம். அதற்காக தான் கட்சி மாறினோம் என்றனர்.