ஓசூர்: ஓசூர் அருகே வேலைக்கு சென்ற வாலிபர் மாயமானார்.ஓசூர் காமன்தொட்டியை
சேர்ந்தவர் பேகராஜன்.
இவரது மகன் சிவசண்முகம் (25). இவர் ஓசூரில் உள்ள
தனியார் கம்பெனியில் கடந்த 11ம் தேதி வேலைக்கு சேருவதாக கூறி பெற்றோரிடம்
கூறி சென்றார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த
பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.இது
குறித்து பேகராஜன் சூளகிரி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விசாரித்து
மாயமான வாலிபரை தேடி வருகின்றனர்.


