ADDED : செப் 08, 2011 10:39 PM
வத்திராயிருப்பு : உலக அமைதிக்காக வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் ருத்தர யாகம், யக்ஞ சிவாராதனை நடந்தது.
முதல்நாள் கணபதி ஹோமம் வாஸ்துசாந்தி, நவக்கிரஹ பூஜை, கடஸ்தாபனம், 2ம் நாள் ருத்ர கிரமார்ச்சனை, லலிதா சஹஸ்கரநாம அர்ச்சனை, வேதசாற்று முறைநடந்தது. 3 ம் நாள் ஏகாதசருத்ர ஜெபம், இறுதி நாளில் ருத்ர ஹோமம், பரிகார பூஜை, மூலமந்திர ஹோமம், வசுர்தாராஹோமம், 108 கலசாபிஷேகம், காசிவிஸ்வநாதருக்கும், விசாலாட்சியம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் 18 வகை அபிஷேகம் நடந்தது.
50 க்கும் மேற்பட்ட வேதவிற்பன்னர்கள் ஹோம பூஜைகளை நடத்தினர். மாலையில் சுவாமி அம்மன் காளைவாகனத்தில் வீதியுலா நடந்தது.