Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/உள்ளாட்சி தேர்தல்: காங்., விருப்ப மனுவுக்கு அழைப்பு

உள்ளாட்சி தேர்தல்: காங்., விருப்ப மனுவுக்கு அழைப்பு

உள்ளாட்சி தேர்தல்: காங்., விருப்ப மனுவுக்கு அழைப்பு

உள்ளாட்சி தேர்தல்: காங்., விருப்ப மனுவுக்கு அழைப்பு

ADDED : செப் 18, 2011 01:26 AM


Google News

கிருஷ்ணகிரி: 'கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர் கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை அளிக்கலாம்' என மாவட்ட காங்கிரஸ் தலைவர் காசிலிங்கம் தெரிவித்தார்.



அவர் வெளியிட்ட அறிக்கை: வரும் உள்ளாட்சி தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்து தலைவர், கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர், யூனியன் கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கு கிருஷ்ணகிரி பெங்களூரு சாலையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை பெறும் காங்கிரஸார் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 20ம் தேதிக்குள் வழங்கவேண்டும். விண்ணப்பத்துடன் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் 5 ஆயிரம் ரூபாயும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் 3 ஆயிரம் ரூபாயும், யூனியன் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் 2 ஆயிரம் ரூபாயும், டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் ஆயிரம் ரூபாயும், நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் 500 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us