ADDED : ஆக 01, 2011 10:34 PM
போலீஸ் தரப்பில் கூறியதாவது:பொதுமக்கள் சொத்துக்களை பைனான்ஸ் தொழில் செய்பவர்களிடம் கிரையம், பொது அதிகார ஆவணம், கிரைய ஒப்பந்தம் போன்ற பத்திரங்களை எழுதி கொடுத்து வட்டிக்கு பணம் வாங்கினால், அதன் பின் ஏற்படும் பாதிப்புக்களை சரி செய்ய சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாது.
ஆனால், வட்டிக்கு பணம் வாங்கும் பொதுமக்கள், அடமானம் என்கிற பத்திரத்தை பைனான்ஸ் தொழில் செய்பவர்களிடம் எழுதி கொடுத்துவிட்டு பணம் வாங்கினால், சொத்தில் வில்லங்கம் மட்டுமே ஏற்படுத்த முடியும். பைனான்ஸ் தொழில் செய்பவர்களால், அடமானம் வைத்த சொத்தை அபகரிக்க முடியாது. இதுபோன்ற பத்திரம் எழுதி பணம் வாங்கிய பின் ஏற்படும் பாதிப்புகளுக்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியும். இதனால், பொதுமக்கள் கிரையம், பொது அதிகார ஆவணம், கிரைய ஒப்பந்தம் போன்ற பத்திரங்களை எழுதி கொடுத்து வட்டிக்கு பணம் வாங்க வேண்டாம். தற்போது, வங்கிகளில் எளிய தவணைகளில் கடன் வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி சொத்தை காப்பாற்றி கொள்ளலாம் என்றனர்.