மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அமித்ஷா ஆய்வு கூட்டம்: முதல்வர் புறக்கணிப்பு ?
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அமித்ஷா ஆய்வு கூட்டம்: முதல்வர் புறக்கணிப்பு ?
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அமித்ஷா ஆய்வு கூட்டம்: முதல்வர் புறக்கணிப்பு ?
UPDATED : ஜூன் 17, 2024 06:54 PM
ADDED : ஜூன் 17, 2024 06:43 PM

புதுடில்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக உள்நாட்டு பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டில்லியில் ஆய்வு கூட்டம் நடத்தினார். இதில் மணிப்பூர் பா.ஜ., முதல்வர் பைரன்சிங் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
மணிப்பூரில் கடந்தாண்டு கூகி மற்றும் மெய்டி சமூகத்தினரிடையே பெரும் கலவரம் ஏற்பட்டது. ஏராளமானோர் பலியாகினர். இதை தொடர்ந்து பழங்குடியின இளம் பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ நாட்டை அதிரவைத்தது. இந்த பிரச்னை தணிந்திருந்தாலும், கடந்த சில தினங்களுக்கு முன் கச்சார் மாவட்டத்தில் ஜிரிபாம் என்ற இடத்தில் வன்முறை ஏற்பட்டது. ஒருவர் பலியானார்.
கடந்த 10-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசுகையில், ஒராண்டாக பற்றி எரியும் மணிப்பூர் விவகாரத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். அங்கு வன்முறையை தடுத்து நிறுத்தி நிரந்தர அமைதி நிலவ வேண்டும். இது தொடர்பாக முன்னுரிமையின் கீழ் விவாதிக்கப்பட வேண்டும் என்றார்.
இந்நிலையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டில்லி உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாநில கவர்னர் அனுசுயா உக்கி, டி.ஜி.,பி., ராஜிவ்சிங், தலைமை செயலாளர் வினீத் ஜோஷி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பாதுகாப்பு நிலவரம், மக்களின் சகஜநிலை, என மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் குறித்து விவாதித்தார்.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் பா.ஜ., முதல்வர் பைரோன்சிங் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தை புறக்கணித்தாரா, அல்லது வேறு காரணமா என தெரியவில்லை.