Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/காங்கிர‌ஸை பலவீனப்படுத்துகிறார் மம்தா: நிர்வாகிகள் புகார்

காங்கிர‌ஸை பலவீனப்படுத்துகிறார் மம்தா: நிர்வாகிகள் புகார்

காங்கிர‌ஸை பலவீனப்படுத்துகிறார் மம்தா: நிர்வாகிகள் புகார்

காங்கிர‌ஸை பலவீனப்படுத்துகிறார் மம்தா: நிர்வாகிகள் புகார்

ADDED : செப் 13, 2011 12:39 PM


Google News
புதுடில்லி:மேற்குவங்கத்தில் காங்கிரஸ் கட்சியினை முதல்வர் மம்தா பானர்ஜி பலவீனப்படுத்துகிறார். ஆகவே வரும் உள்ளாட்சித்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து‌ போட்டியிட வேண்டும் என அம்மாநில காங். நிர்வாகிகள் , ராகுலிடம் புகார் தெரிவித்துள்ளனர். மேற்குவங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், திரிணாமுல்காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். அவரது அமைச்சரவையில் இரு காங். எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தின் 10 மாவட்டத்தைச் சேர்ந்த காங். எல்.எல்.ஏ.க்கள், நேற்று டில்லியில் காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுலை சந்தித்து புகார் மனு அளித்தனர் அதில், தேர்தலுக்கு பின்னர் ஆட்சியைபிடித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் போக்‌கில் தற்போது பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மீது அவர்கள் வன்முறை தாக்குதல் நடத்துகின்றனர். இதனை முதல்வர் மம்தா கண்டுகொள்வதில்லை.

இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீப் பட்டாச்சார்யாவிடம் முறையிட்டும் பயனில்லை. எனவே இடதுசாரி கட்சிகளை விட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தான் காங்கிரஸ் கட்சியை குறி வைத்து தாக்குகின்றனர். காங்கிரஸ் கட்சியை மொத்தமாக பலவீனப்படுத்த மம்தா முயற்சிக்கிறார். இனியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடர்ந்தால் பீகார், தமிழ்நாடு மாநிலங்களில் உள்ளது போன்று காங்கிரஸ் கட்சி செல்வாக்கினை இழந்துவிடும். வரும் உள்ளாட்சித்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துபோட்டியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us