/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/பெருமாண்டி பஞ்., ஆஃபீஸ் முற்றுகைகாலி குடங்களுடன் மக்கள் ஆவேசம்பெருமாண்டி பஞ்., ஆஃபீஸ் முற்றுகைகாலி குடங்களுடன் மக்கள் ஆவேசம்
பெருமாண்டி பஞ்., ஆஃபீஸ் முற்றுகைகாலி குடங்களுடன் மக்கள் ஆவேசம்
பெருமாண்டி பஞ்., ஆஃபீஸ் முற்றுகைகாலி குடங்களுடன் மக்கள் ஆவேசம்
பெருமாண்டி பஞ்., ஆஃபீஸ் முற்றுகைகாலி குடங்களுடன் மக்கள் ஆவேசம்
ADDED : ஆக 26, 2011 01:29 AM
கும்பகோணம்: கும்பகோணம் அருகே பெருமாண்டி பஞ்.,ல் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் பஞ்., அலுவலகம் முன் முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் செய்தனர்.கும்பகோணம் நகரத்தை ஒட்டி உள்ளது பெருமாண்டி பஞ்சாயத்து.
இந்த பஞ்.,ல் காமராஜர் நகர், மாதாகோயில் தெரு, ராஜாகாலனி, நேரு நகர், வ.உ.சி.நகர், கணபதி நகர், ஆட்டோ நகர், பழனிச்சாமி நகர், இந்திரா நகர், மருதமுத்து சகாஜிநாயக்கன் தோப்பு, நீலத்தநல்லூர் மெயின் ரோடு ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் 2,000 வீடுகளில் 4,500 பேர் வசிக்கின்றனர். இந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு கடந்த பல ஆண்டாக குடிநீர் இல்லாமல் இருந்தது. இதையடுத்து இப்பகுதி மக்கள் முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த கோ.சி.மணியிடம் முறையிட்டு பெருமாண்டி பஞ்.,க்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என கோரினர். அவரும், மக்களின் வாழ்வாதாரமான குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு உடனடியாக கும்பகோணம் நகராட்சி பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீரில் இந்த பகுதிகளுக்கும் குடிநீர் வழங்குமாறு நகராட்சி நிர்வாகத்திடம் அறிவுறுத்தினார். அதன்படி நகராட்சி நிர்வாகம் பெருமாண்டி பஞ்.,க்கு பல ஆண்டாக குடிநீரை வழங்கி வந்தது. பெருமாண்டி பஞ்.,க்கு ஆரம்பத்தில் 5 பொது குடிநீர் குழாய் வழங்கப்பட்டது. நாளடைவில் மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவாக பஞ்., நிர்வாகம் சார்பில் தற்போது 30 பொது குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டது.கும்பகோணம் நகருக்கு கடந்த ஒராண்டுகாலமாக போதுமான குடிநீர் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து நகராட்சி நிர்வாகம் தங்கள் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கே போதுமான குடிநீர் வழங்க முடியவில்லை. பஞ்., பகுதியில் உள்ள உங்களுக்கு எப்படி குடிநீர் வழங்கமுடியும் என கூறி பாலக்கரை பகுதியிலிருந்து பெருமாண்டிக்கு செல்லும் குடிநீர் குழாய் இணைப்பை நேற்று முன்தினம் துண்டித்தது. இதனால் பெருமாண்டி பகுதிக்கு கடந்த இரு நாட்களாக குடிநீர் வராமல் போனதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும், பெருமாண்டி பஞ்.,க்கு குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி நேற்று அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் 100 பேர் பஞ்., அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் செய்தனர். பின் முன்னாள் பஞ்., தலைவர் தங்கராசு மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்புகொண்டு பெருமாண்டி பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததையடுத்து, தற்போது 10 இடங்களில் புதிதாக பொது குடிநீர் குழாய் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. பெருமாண்டி பஞ்.,ஐ கடந்து தான் கொள்ளிடத்திலிருந்து வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாய்கள், கும்பகோணம் நகராட்சி, கும்பகோணம் ஒன்றிய பகுதிகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் ஆகியவை செல்கிறது. எனவே, இந்த குழாய்களிலிருந்து குடிநீரை பெருமாண்டி பஞ்.,க்கு நிரந்தரமாக வழங்க வேண்டும் என தங்கராசு மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.