/உள்ளூர் செய்திகள்/மதுரை/அவசர கால மீட்பு வாகனத்திற்கு ஆட்கள் ஒதுக்கீடு எப்போதுஅவசர கால மீட்பு வாகனத்திற்கு ஆட்கள் ஒதுக்கீடு எப்போது
அவசர கால மீட்பு வாகனத்திற்கு ஆட்கள் ஒதுக்கீடு எப்போது
அவசர கால மீட்பு வாகனத்திற்கு ஆட்கள் ஒதுக்கீடு எப்போது
அவசர கால மீட்பு வாகனத்திற்கு ஆட்கள் ஒதுக்கீடு எப்போது
ADDED : செப் 04, 2011 01:20 AM
மதுரை : மதுரையில் இடிபாடுகள், விபத்தில் சிக்கியவர்களை மீட்க, நவீன கருவிகளை கொண்ட அவசர கால மீட்பு வண்டிக்கு ஆட்கள் நியமிக்கப்படாததால், ஒரே நேரத்தில் இந்த வண்டியையும், தீயணைப்பு வண்டியையும் கையாளுவதில் வீரர்கள் சிரமப்படுகின்றனர்.
மதுரை நகர் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டுள்ள இந்த வண்டியின் மதிப்பு ரூ.25 லட்சம். வாகனங்கள் விபத்துக்குள்ளாகும்போது, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கவும், கட்டட இடிபாடுகளிலிருந்து காப்பாற்றவும் இந்த வண்டி பயன்படுகிறது. இதற்காகவே கட்டர், ஜாக்கி, இரும்பு பக்கெட்
(மண் அள்ளும் இயந்திரம் மாதிரி), ரம்பம், ஏர்லிப்ட் என மொத்தம் 75 விதமான கருவிகள் மட்டுமே இதில் உள்ளன. பிற மாவட்டங்களுக்கு இந்த வண்டியை ஒதுக்கீடு செய்த போது, அதற்குரிய ஆட்கள் நியமிக்கப்பட்டனர். மதுரைக்கு நியமிக்கப்படவில்லை. இதனால் தீயணைப்பு வண்டிக்கென நியமிக்கப்பட்ட வீரர்கள், இந்த அவசரகால மீட்பு வண்டியை சேர்த்து கவனிக்க வேண்டியுள்ளது. இடிபாடுகள், விபத்து ஏற்பட்டால், இந்த வண்டிக்கு பதில் தீயணைப்பு வண்டியே முதலில் செல்கிறது. அதிகாரி ஒருவர் கூறுகையில், ''இந்த வண்டிக்குரிய ஆட்களை உடனடியாக நியமிக்குமாறு அரசிடம் கேட்டுள்ளோம். அதுவரை, விடுமுறை அல்லது ஓய்வில் இருக்கும் வீரர்களை தேவைப்படும் பட்சத்தில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.
இதற்கிடையே, 160 அடி உயரம் கொண்ட ஏணி வசதிக்கொண்ட தீயணைப்பு வண்டி இம்மாத இறுதிக்குள் மதுரை வர உள்ளது. இதை நிறுத்துவதற்குரிய வசதி, 1944ல் ஓடுகளால் வேயப்பட்ட மதுரை நகர், 1947ல் கட்டப்பட்ட தல்லாகுளம் தீயணைப்பு நிலையங்களில் இல்லாததால் திறந்தவெளியில் இந்த வண்டியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க, கான்கிரீட் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.