
ஜெகனுக்கு ஏற்பட்ட வயிற்றெரிச்சல்
தன் மீது, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்ட காங்கிரஸ் மேலிடத்தின் மீது, உச்சக்கட்ட வெறுப்பில் இருக்கிறார், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி.
இதற்காக, சிரஞ்சீவி மீது, திடீரென பாசமழை பொழிவது போல், அதிரடியாக அரசியல் அறிக்கை ஒன்றை, சமீபத்தில் விட்டார்.அதில், 'தயவு செய்து காங்கிரசை நம்பாதீர்கள். அது ஒரு பெருங்கடல். காங்கிரசுடன் உங்கள் கட்சியை இணைப்பது என்பது, சுனாமியை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம். காங்கிரசில் உள்ளவர்கள், தேவைக்கு ஏற்ப உங்களை பயன்படுத்திக் கொண்டு, பின், செல்லாக்காசாக்கி விடுவார்' என, ஜெகன் கூறியிருந்தார்.
சிரஞ்சீவி வட்டாரத்தில், இந்த அறிக்கை, பெரும் அதிர்வலையை ஏற்படுத்துவதற்கு பதிலாக, காமெடியை ஏற்படுத்தியுள்ளது. சிரஞ்சீவி ஆதரவாளர்கள் கூறுகையில், ' இதையெல்லாம் பெரிது படுத்த வேண்டாம். ஜெகன் வயிற்றெரிச்சலில் உளறுகிறார். அவருக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை. இப்போ, அவர் வெறும் காமெடி பீஸ் தான்' என, எக்குத் தப்பாக கிண்டலடிக்கின்றனர்!