உள்ளாட்சி தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி தனித்து போட்டி
உள்ளாட்சி தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி தனித்து போட்டி
உள்ளாட்சி தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி தனித்து போட்டி
ADDED : செப் 28, 2011 06:38 PM
சென்னை:உள்ளாட்சித் தேர்தலில், மனிதநேய மக்கள் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கையில், 'கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இணைந்து போட்டியிட்டது. கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு அ.தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடித்தது.'உள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் கூட்டணி நீடிக்க பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும், உறுதியான முடிவை கூறாமல் காலதாமத தந்திரத்தை அ.தி.மு.க., கடைபிடித்தது. இதை கருத்தில் கொண்டும், தொண்டர்களின் உணர்வுகளை கவனத்தில் கொண்டும் மனிதநேய மக்கள் கட்சி, உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது' என, தெரிவித்துள்ளார்.