ம.பி.,யில் கோயில் சுவர் இடிந்து 9 குழந்தைகள் பலி
ம.பி.,யில் கோயில் சுவர் இடிந்து 9 குழந்தைகள் பலி
ம.பி.,யில் கோயில் சுவர் இடிந்து 9 குழந்தைகள் பலி
UPDATED : ஆக 04, 2024 12:26 PM
ADDED : ஆக 04, 2024 12:11 PM

போபால்: ம.பி.,யில் கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் உயிரிழந்தனர்.
ஷாபூரின் ஹர்தவுல் பாபா கோயிலில் நடந்த வழிபாட்டு நிகழ்ச்சியின் போது திடீரென சுவர் இடிந்து விழுந்தது. இதில் 9 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சில குழந்தைகள் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உள்ளூர் மக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கி உள்ளனரா என தேடும் பணி நடந்து வருகிறது.