ADDED : செப் 18, 2011 10:24 PM
விழுப்புரம்:விக்கிரவாண்டி அருகே டேங்கர் லாரி மோதியதில் வாலிபர்
இறந்தார்.திண்டிவனம் வட்டம் பழமுக்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ, 35.
இவர் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் கண்டரக்கோட்டைக்கு
சென்று கொண்டிருந்தார். பனையபுரம் அடுத்த மண்டபம் கிராமம் அருகே டேங்கர்
லாரி ஒன்று திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே
ராஜூ இறந்தார்.விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து
விசாரித்து வருகின்றனர்.