/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/போக்குவரத்து கழக அதிகாரிகளை கண்டித்துஉருவபொம்மையுடன் நூதன போராட்டம்போக்குவரத்து கழக அதிகாரிகளை கண்டித்துஉருவபொம்மையுடன் நூதன போராட்டம்
போக்குவரத்து கழக அதிகாரிகளை கண்டித்துஉருவபொம்மையுடன் நூதன போராட்டம்
போக்குவரத்து கழக அதிகாரிகளை கண்டித்துஉருவபொம்மையுடன் நூதன போராட்டம்
போக்குவரத்து கழக அதிகாரிகளை கண்டித்துஉருவபொம்மையுடன் நூதன போராட்டம்
ADDED : செப் 12, 2011 04:04 AM
தாராபுரம்: தாராபுரம் சி.ஐ.டி.யூ., சங்கம் சார்பில் டிரைவர், கண்டெக்டர்
ஆகியோரின் பணிச்சுமையும், அதிகாரிகளின் பழிவாங்கும் போக்கு, செயல்பாடுகளை
வெளிப்படுத்தும் வகையில் உருவ பொம்மை வைத்து தங்கள் ஆதங்கத்தை
வெளிப்படுத்தினர்.தமிழக அரசின் வேண்டுகோள்படி டீஸல் சிக்கனம், தொடர் பணி
ஆகியவற்றின் காரணமாக டிரைவர், கண்டெக்டர் ஆகியோரை அதிகாரிகள் திட்டுவது,
மெமோ கொடுப்பது, தொடர் வேலை பளுவை கொடுப்பதை தொடர்கதையாகி வருகிறது.
அதிக நிறுத்தங்களில் பஸ் நிறுத்துவது, கூடுதல் பயணிகளை ஏற்றக்கோருவது ஆகிய
காரணங்களாக கூடுதலாக டீஸல் செலவாகிறது. பஸ்ஸின் அளவு 52 பயணிகள், சொகுசு
பஸ்களில் 42 பயணிகள் இந்த அளவில் வைத்து பஸ்ஸை இயக்குவதோடு, குறிப்பிட்ட
நிறுத்தங்களில் மட்டும் பஸ்களை நிறுத்துவதால் மட்டுமே டீஸல் சிக்கனம் செய்ய
முடியும்.இதைச்செய்யாமல் கூடுதல் பயணிகளை ஏற்றவும், அனைத்து பஸ்
நிறுத்தங்களில் பஸ்ஸை நிறுத்தி பயணிகள் ஏற்றிச் செல்லாவிட்டால் டிரைவர்,
கண்டெக்டர்களுக்கு மெமோ வழங்குகின்றனர்.தொடர் பணிச்சுமைக்கு ஆளாவதுடன்,
மனநோயாளி ஆகும் சூழல் உருவாகியுள்ளது. அதிகாரிகளின் கொடுமைகளை விளக்கும்
விதமாக மனித உருவ பொம்மைகளை வைத்து தங்களுடைய ஆதங்கத்தை
வெளிப்படுத்தியுள்ளனர்.