ADDED : செப் 11, 2011 11:42 PM
காட்டுமன்னார்கோவில்: சிதம்பரம் அருகே முதலை கடித்து மாணவர் படுகாயமடைந்தார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த சிவாயம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி மகன் ராஜ்குமார், 14. குமராட்சி அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்புறம் உள்ள காஞ்ச வாய்க்காலில் இறங்கிபோது திடீரென வாய்க்காலில் இருந்த முதலை, மாணவரின் காலை கவ்விப் பிடித்தது. தடுமாறி வாய்க்காலில் விழுந்த மாணவனை கை, கால், உடல் பகுதிகளில் கடித்துக் குதறியது. உடன், அருகில் இருந்தவர்கள் முதலையை விரட்டி, மாணவர் ராஜ்குமாரை மீட்டனர். படுகாயமடைந்த ராஜ்குமார், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.