Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/நூலகத்தைதிறக்ககோரிக்கை

நூலகத்தைதிறக்ககோரிக்கை

நூலகத்தைதிறக்ககோரிக்கை

நூலகத்தைதிறக்ககோரிக்கை

ADDED : ஆக 11, 2011 05:22 AM


Google News
அவிநாசி:வடுகபாளையத்தில் கட்டப்பட்டுள்ள நூலகத்தை திறக்க வேண்டுமென மா.கம்யூ., கோரிக்கை விடுத்துள்ளது.அக்கட்சியின் கிளை மாநாடு, சமுதாய நலக்கூடத்தில் செல்வராஜ், மாரம்மாள் தலைமையில் நடந்தது. கிளை செயலாளர்கள் சுப்ரமணி, ராமசாமி வேலை அறிக்கை வாசித்தனர்.'வடுகபாளையத்தில் மூடிக்கிடக்கும் நூலகத்தை திறக்க வேண்டும்; சாக்கடை, சாலை வசதி, தொகுப்பு வீடுகளுக்கு மின் இணைப்பு வசதி ஏற்படுத்த வேண்டும்,' என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கிளை செயலாளர்களாக சுப்ரமணி, ராமசாமி ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us