/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/விலைவாசி உயர்வை கண்டித்து தொடர் போராட்டம் அறிவிப்புவிலைவாசி உயர்வை கண்டித்து தொடர் போராட்டம் அறிவிப்பு
விலைவாசி உயர்வை கண்டித்து தொடர் போராட்டம் அறிவிப்பு
விலைவாசி உயர்வை கண்டித்து தொடர் போராட்டம் அறிவிப்பு
விலைவாசி உயர்வை கண்டித்து தொடர் போராட்டம் அறிவிப்பு
ADDED : ஜூலை 27, 2011 11:44 PM
புதுச்சேரி : 'சமையல் காஸ், மண்ணெண்ணெய் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்' என, புதுச்சேரி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூ., கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் செயலாளர் பாலசுப்ரமணியன், நிருபர்களிடம் கூறியதாவது: விலைவாசி உயர்வு, ஊழல் ஆகியவற்றை எதிர்த்து தலைமை தபால் நிலையம் எதிரில் இன்று(28ம் தேதி) கண்டன ஆர்ப்பாட்டமும், ஆகஸ்ட் 9ம் தேதியன்று சிறை நிரப்பும் போராட்டமும் நடத்த உள்ளோம். லோக்பால் வரைவு மசோதாவை உடனடியாக சட்டமாக்க வேண்டும். சமையல் எரிவாயு, டீசல், மண்ணெண்ணெய் மீதான விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும். பொது வினியோக திட்டத்தில் 14 பொருட்களை வழங்குவதை கட்டாயமாக்க வேண்டும். புதுச்சேரியிலும், ஊழலுக்கு எதிரான மாநில சட்டத்தை அரசு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சங்கரன் உடனிருந்தார்.