Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அதிகமான மாணவர்கள் "ஆப்சென்ட்':கவனிக்குமா கல்வித்துறை

அதிகமான மாணவர்கள் "ஆப்சென்ட்':கவனிக்குமா கல்வித்துறை

அதிகமான மாணவர்கள் "ஆப்சென்ட்':கவனிக்குமா கல்வித்துறை

அதிகமான மாணவர்கள் "ஆப்சென்ட்':கவனிக்குமா கல்வித்துறை

ADDED : ஜூலை 28, 2011 09:50 PM


Google News
திருப்பூர் : பள்ளிகளில் தற்போது மாணவர்களுக்கு இணைப்பு பயிற்சி மற்றும் அடிப்படை கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

அதனால், புத்தகம் இன்னும் வழங்கப்படவில்லை என காரணம் கூறி, 30 சதவீத மாணவர்கள் விடுப்பு எடுத்து வருகின்றனர்.பள்ளிகள் கடந்த ஜூன் 15ம் தேதி திறக்கப்பட்டன. ஆனால், இன்னும் புத்தகங்கள் வழங்கப்படாததால், கடந்த ஒன்றரை மாதமாக இணைப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு மட்டும் பாடப்புத்தகம் வினியோகிக்கப்பட்டுள்ளன. இரண்டு முதல் பத்தாம் வகுப்பு வரை எஞ்சிய வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான பாடத்திட்டம் இன்னும் முடிவாகாத நிலை உள்ளது. கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு களப்பயணம், யோகா பயிற்சி, மருத்துவ முகாம் உள்ளிட்டவை நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.இலக்கணம், வாய்ப்பாடு, கையெழுத்து உள்ளிட்ட அடிப்படை கல்வியும் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பாடத்திட்டங்கள், கால அட்டவணையுடன் தயாரிக்கப்பட்டு, 'சிடி'க்கள் மூலம் பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாணவ, மாணவியருக்கு ஆசிரியர்கள் வகுப்பெடுத்து வருகின்றனர். ஆனால், பெரும்பாலான அரசு பள்ளிகளில் புத்தகம் இல்லை என்ற காரணம் கூறி, 30 சதவீதத்துக்கு அதிகமான மாணவர்கள் விடுப்பெடுத்து வருகின்றனர்.ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'மாணவர்களுக்கு முக்கியமான அடிப்படை கல்வி பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது. அதை பயன்படுத்திக் கொள்ளாமல் மாணவர்கள் விடுப்பு எடுப்பது தவறானது. குழந்தைகள் பள்ளிக்கு விடுப்பெடுத்தால் பெற்றோரும் கண்டிப்பதில்லை. இதனால், மாணவர்கள் விடுப்பெடுப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us