/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தபால் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பழுது : வெளிநாட்டு பணம் பெற முடியாமல் அவதிதபால் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பழுது : வெளிநாட்டு பணம் பெற முடியாமல் அவதி
தபால் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பழுது : வெளிநாட்டு பணம் பெற முடியாமல் அவதி
தபால் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பழுது : வெளிநாட்டு பணம் பெற முடியாமல் அவதி
தபால் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பழுது : வெளிநாட்டு பணம் பெற முடியாமல் அவதி
ADDED : ஆக 11, 2011 11:04 PM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை தலைமை தபால் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பழுததால், வெளி நாட்டிலிருந்து வரும் பணங்களை பெற முடியாமல் பலரும் அவதிப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் தலைமை தபால் அலுவலகம் உள்ளது. இங்கு அருப்புக்கோட்டை மற்றும் அதனை சுற்று கிராமங்களில் வெளி நாடுகளில் வேலை பார்ப்பவர்கள், தங்கள்குடும்பத்திற்கு பணம் அனுப்ப தபால் அலுவலகம் மூலமாக 'வெஸ்டர்ன் யூனியன்' பணமாற்ற வசதியை பயன்படுத்துகின்றனர். இதனால், எந்தவித காலதாமதம் இல்லாமல் பணத்தை எடுத்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக கம்ப்யூட்டர் பழுதால் பண மாற்றம் செய்ய முடியவில்லை. இதனால், மக்கள் தினமும் அலைகின்றனர். பழுதடைந்த கம்யூட்டரை சரி செய்து பணம் பெற தபால் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் .