/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/"கலைமாமணி' கேட்கும் தவில் கலைஞர் கட்டைக்காலில் 61 கி.மீ., நடைபயணம்"கலைமாமணி' கேட்கும் தவில் கலைஞர் கட்டைக்காலில் 61 கி.மீ., நடைபயணம்
"கலைமாமணி' கேட்கும் தவில் கலைஞர் கட்டைக்காலில் 61 கி.மீ., நடைபயணம்
"கலைமாமணி' கேட்கும் தவில் கலைஞர் கட்டைக்காலில் 61 கி.மீ., நடைபயணம்
"கலைமாமணி' கேட்கும் தவில் கலைஞர் கட்டைக்காலில் 61 கி.மீ., நடைபயணம்

பழநி:'கலைமாமணி' விருது கேட்டு, பழநி தவில் கலைஞர் 61 கி.மீ., தூரம் தவில் வாசித்தபடி நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்.
பழநியைச் சேர்ந்த தவில் கலைஞர் மாரிமுத்து,48.இங்கிருந்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் நோக்கி (61 கி.மீ.,), கட்டைக்காலில் தவில் வாசித்தபடி, நடைபயணத்தை நேற்று துவக்கினார்.
அவர் கூறியதாவது:ஆறு தலைமுறையாக தவில் வாசிக்கும் தொழில் செய்து வருகிறோம். இதில் புதுமையை ஏற்படுத்த, கட்டைக்காலில் நின்றபடி தவில் வாசித்தலை உருவாக்கினேன். சில மாதங்களுக்கு முன், சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் விவசாயிகள் நடத்திய விதை கண்காட்சியில் அரங்கேற்றம் செய்தேன்.இது தவிர, தலையில் தீக்கரகம் வைத்து தவில் வாசித்தல் போன்றவற்றை செய்து காட்டியுள்ளேன்.தமிழக அரசின் சார்பில், 'கலைச்சுடர்மணி' விருது பெற்றுள்ளேன்.
அரை குறை ஆடையுடன் மேடை, சினிமாக்களில் வருவோருக்கு, 'கலைமாமணி' விருது வழங்கப்படுகிறது. நாட்டுப்புற கலைகளை அரசு கண்டு கொள்ளவில்லை. தமிழ்ப் பாண்பாட்டை வளர்க்கும் ஏராளமான கலைகள், கவனிப்பாரின்றி அழிந்து வருகின்றன.இதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும், எனக்கு 'கலைமாமணி' விருது வழங்க வலியுறுத்தியும், 61 கி.மீ., கட்டைக்கால் தவில் நடைபயணம் மேற்கொள்கிறேன்.இவ்வாறு மாரிமுத்து கூறினார்.
நேற்று துவங்கிய கட்டைக்கால் நடைபயணத்தின் முடிவில், நாளை (ஜூலை 25) திண்டுக்கல் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளார்.


