அன்னா ஹசாரேயின் உண்ணாவிரத அறப்போராட்டம் : எட்டாவது நாள் துளிகள்
அன்னா ஹசாரேயின் உண்ணாவிரத அறப்போராட்டம் : எட்டாவது நாள் துளிகள்
அன்னா ஹசாரேயின் உண்ணாவிரத அறப்போராட்டம் : எட்டாவது நாள் துளிகள்

*அன்னா ஹசாரேயின் உண்ணாவிரத அறப்போராட்டம், நேற்று எட்டாவது நாளாகத் தொடர்ந்தது.
*அங்கு கூடியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின், கரகோஷத்துக்கு இடையே, நேற்று காலையில், ஹசாரே மேடைக்கு வந்தார்.
*அங்கு இருந்த மைக்ரோ போனை எடுத்து, 'பாரத் மாதா கி ஜே'என, உணர்ச்சிப் பெருக்குடன் முழங்கினார்.
*கூட்டத்தினரும், 'பாரத் மாதா கி ஜே'என, குரல் எழுப்பினர்.
*ஆதரவாளர்கள் மத்தியில், லோக்பால் விவகாரம் குறித்து, உறுதியான குரலில், தன் வாதத்தை எடுத்து வைத்தார்.
*மது அருந்தியோ, ரகளையில் ஈடுபடும் நோக்கத்துடனோ, யாரும் வர வேண்டாம் என, கண்டிப்புடன் கூறினார்.
*'தற்போது எம்.பி.,க்களின் வீடுகளின் முன்பாக, 20 முதல் 25 பேர் கொண்ட குழுவினர், தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கல்மாடி வீடு முற்றுகை
காங்கிரஸ் எம்.பி.,யும், காமன்வெல்த் ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவருமான சுரேஷ் கல்மாடியின் சொந்த ஊர், மகாராஷ்டிரா மாநிலம் புனே. நேற்று காலை, இங்குள்ள கல்மாடியின் வீடு முன்பாக, ஹசாரே ஆதரவாளர்கள் ஏராளமாக திரண்டனர். அவரது வீட்டை முற்றுகையிட்டு, ஊழலுக்கு எதிராக கோஷம் எழுப்பியும், தேசபக்தி பாடல்களை இசைத்தனர். இதன்பின், அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.