புனிதவதியார் - பரமதத்தர் திருக்கல்யாணம்
புனிதவதியார் - பரமதத்தர் திருக்கல்யாணம்
புனிதவதியார் - பரமதத்தர் திருக்கல்யாணம்
ADDED : ஜூலை 13, 2011 04:47 PM
காரைக்கால்: காரைக்கால் மாங்கனித்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, புனிதவதியார் - பரமதத்தர் திருக்கல்யாணம், இன்று நடந்தது.
நாயன்மார்களில் ஒருவரான, காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார். காரைக்கால் அம்மையாரின் வாழ்கை வரலாற்றை விவரிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், காரைக்கால் அம்மையார் கோவிலில், மாங்கனி திருவிழா நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, புனிதவதியார் - பரமதத்தர் திருக்கல்யாணம், இன்று நடந்தது. காலை 10.30 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் ஒலிக்க, வேதமந்திரங்கள் முழங்க, புனிதவதியாருக்கு பரமதத்தர் திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பரமதத்தர் சார்பாக ஆலய குருக்கள், புனிதவதியாருக்கு மாங்கல்யம் அணிவித்தார். பின், மகா பூர்ணாஹூதியுடன், மகா தீபாராதனை நடந்தது. நாளை காலை 9 மணிக்கு, சிவபெருமான் காவியுடை, ருத்திராட்சம் தாங்கி, பிச்சாண்டவர் வேதபாராயணம் நான்கு திசையிலும் எதிரொலிக்க, பவழக்கால் விமானத்தில், கைலாசநாதர் கோவிலில் இருந்து புறப்பாடு நடக்கிறது. பக்தர்கள் படையலுக்குப் பின், மாங்கனி வீசும் வைபவம் நடக்கிறது.


