/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/இலவச மாடுகள் வழங்கும் திட்டம் பயனாளிகள் தேர்வில் முறைகேடுஇலவச மாடுகள் வழங்கும் திட்டம் பயனாளிகள் தேர்வில் முறைகேடு
இலவச மாடுகள் வழங்கும் திட்டம் பயனாளிகள் தேர்வில் முறைகேடு
இலவச மாடுகள் வழங்கும் திட்டம் பயனாளிகள் தேர்வில் முறைகேடு
இலவச மாடுகள் வழங்கும் திட்டம் பயனாளிகள் தேர்வில் முறைகேடு
ADDED : செப் 16, 2011 11:09 PM
இளையான்குடி : இளையான்குடியில் இலவச மாடு வழங்கும் விழாவில் பயனாளிகள் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் மருதங்கநல்லூர் ஊராட்சியில் தமிழக அரசின் இலவச மாடு வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ராஜாராமன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் பஞ்சவள்ளி முன்னிலை வகித்தார். கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் அறிவழகன், துணை இயக்குனர் முத்தையா, மகளிர் திட்ட அலுவலர் சீனிவாசன் பேசினர். மாடு வழங்கும் திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாகவும் , வசதியானவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாகவும் கூறி கிராம மக்கள் கூட்டமாக வந்து புகார் தெரிவித்தனர். போலீசார் பேசி அமைதிப்படுத்தினார். கலெக்டர் ராஜாராமன் பேசுகையில், ''கிராம சபையில் வைத்து தான் அரசு விதிகளின் படி பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உங்கள் புகாரையும் விசாரிக்கிறேன் . தவறு நடந்து இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என கூறினார். தேர்வு செய்யப்பட்ட 43 பயனாளிகளில் இரண்டு பயனாளிகளுக்கு மாடுகளை வழங்கிவிட்டு உடனே கிளம்பினார். கிராம மக்கள் கூட்டமாக புகார் தெரிவித்ததையடுத்து விழா துவங்கிய 10 நிமிடத்தில் முடிந்தது.