திட்டக்குழுவுக்கு தலைமை தாங்குகிறார் பிரதமர்
திட்டக்குழுவுக்கு தலைமை தாங்குகிறார் பிரதமர்
திட்டக்குழுவுக்கு தலைமை தாங்குகிறார் பிரதமர்
ADDED : ஆக 18, 2011 09:33 AM
சென்னை: 12வது ஐந்தாண்டு திட்ட மசோதாவை இறுதி செய்வதற்காக வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள திட்டக்குழு கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கவுள்ளதாக, திட்டக்குழு உறுப்பினர் அபிஜித் சென் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், 12வது ஐந்தாண்டு திட்ட மசோதாவை இறுதி செய்வதற்காக வரும் சனிக்கிழமை திட்டக்குழுவின் கூட்டம் டில்லியில் நடக்கவுள்ளது. இதில் குழுவின் தலைவரான பிரதமர் கலந்து கொள்கிறார். இக்கூட்டத்தில் திட்டம் இறுதி செய்யப்பட்டு பின் மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் 12வது ஐந்தாண்டு திட்டத்தில் விவசாய வளர்ச்சியை 3.2 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்த்துவதை முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளதாகவும் சென் தெரிவித்தார்.