Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/சுப்ரீம் கோர்ட் உட்பட டில்லி கோர்ட்டுகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது தீவிரம்

சுப்ரீம் கோர்ட் உட்பட டில்லி கோர்ட்டுகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது தீவிரம்

சுப்ரீம் கோர்ட் உட்பட டில்லி கோர்ட்டுகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது தீவிரம்

சுப்ரீம் கோர்ட் உட்பட டில்லி கோர்ட்டுகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது தீவிரம்

ADDED : செப் 18, 2011 11:55 PM


Google News

புதுடில்லி: டில்லி ஐகோர்ட் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, டில்லியில் சுப்ரீம் கோர்ட் மற்றும் உள்ள ஆறு கோர்ட்டுகளில், கண்காணிப்பு கேமராக்களை அமைக்கும் பணிகளை, மாநகர போலீசார் துவக்கியுள்ளனர்.



டில்லி ஐகோர்ட்டில், சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், 15 பேர் பலியாகினர்.

70 பேர் காயம் அடைந்தனர். பயங்கரவாதிகளால் தொடர்ந்து அச்சுறுத்தல் உள்ளதால், போதுமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை துவக்கும்படி, உளவுத்துறை எச்சரித்தது. மேலும், கோர்ட் வளாகங்களில் கண்காணிப்பு கேமராக்களை ( சி.சி.டி.வி), உடனடியாக அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட், பாட்டியாலா கோர்ட் மற்றும் சில உள்ளூர் கோர்ட்டுகளில், கண்காணிப்பு கேமராக்களை அமைப்பது தொடர்பாக, டில்லி போலீசார் டெண்டர் கோரியிருந்தனர். தற்போதைய நிலையில், டில்லி போலீசார், 235 கண்காணிப்பு கேமராக்களை வாங்கவுள்ளனர். இவற்றில், சுப்ரீம் கோர்ட்டில் 44 கேமராக்கள் அமைக்கப்படுகின்றன. ஐகோர்ட்டில் 31 கேமராக்களும், சி.பி.ஐ., கோர்ட் அமைந்துள்ள பாட்டியாலா கோர்ட்டில் 32ம், அமைக்கப்பட உள்ளன. மேலும், டிஸ் ஹசாரியில் 30ம், துவாரகாவில் 48 கேமராக்களும் அமைக்கப்படுகின்றன. கோர்ட்டிற்கு வருபவர்கள் யாரையும் விட்டு வைக்காமல், அனைத்தும் பதிவாகும் வகையில், 24 மணி நேரமும் இந்த கேமராக்கள் வேலை செய்து கொண்டு இருக்கும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us