UPDATED : செப் 19, 2011 03:53 PM
ADDED : செப் 19, 2011 03:33 PM
ஐதராபாத்: தெலுங்கான கோரிக்கையை வலியுறுத்தி உஸ்மானியா மற்றும் நிஜாம் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால் பதட்டம் நிலவுகிறது. சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு்ள்ளனர். தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி 10 மாவட்டங்களை சேர்ந்த அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியைச் சேர்ந்த உஸ்மானியா பல்கலை. மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இவர்களுக்கு ஆதரவாக நிஜாம் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளதால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.