திருச்செந்தூரில் இன்றுஆவணித் தேரோட்டம்
திருச்செந்தூரில் இன்றுஆவணித் தேரோட்டம்
திருச்செந்தூரில் இன்றுஆவணித் தேரோட்டம்
ADDED : ஆக 28, 2011 01:20 AM
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் தேரோட்டம் இன்று காலை நடக்கிறது.
இக்கோவில் ஆவணித் திருவிழா ஆக.,19 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜை, தீபாராதனை, சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான ஆவணித் தேரோட்டம், பத்தாம் நாளான இன்று காலை 6 மணியளவில் நடக்கிறது. சுவாமி குமரவிடங்கப்பெருமான், அம்பாள்களுடன் தேரில் எழுந்தருளி, ரத வீதிகளைச் சுற்றி வந்து நிலை சேருவார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் பாஸ்கரன், அதிகாரிகள் செய்துள்ளனர்.


