/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கலவரத்திற்கு காரணம் போலீஸ் தான் நெல்லையில் ஜான் பாண்டியன் ஆவேசம்கலவரத்திற்கு காரணம் போலீஸ் தான் நெல்லையில் ஜான் பாண்டியன் ஆவேசம்
கலவரத்திற்கு காரணம் போலீஸ் தான் நெல்லையில் ஜான் பாண்டியன் ஆவேசம்
கலவரத்திற்கு காரணம் போலீஸ் தான் நெல்லையில் ஜான் பாண்டியன் ஆவேசம்
கலவரத்திற்கு காரணம் போலீஸ் தான் நெல்லையில் ஜான் பாண்டியன் ஆவேசம்
ADDED : செப் 13, 2011 11:52 PM
திருநெல்வேலி : 'பரமக்குடி கலவரத்திற்கு போலீஸ் தான் காரணம்' என நெல்லையில் ஜான் பாண்டியன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான் பாண்டியன் நேற்று காலை விடுவிக்கப்பட்டார். கட்சி நிர்வாகிகளுடன் அவர் பாளை. வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் கூறியதாவது: பரமக்குடியில் நடந்தது இனக்கலவரம் அல்ல. நான் பரமக்குடி செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டதாக போலீசார் தவறான தகவல் அளித்துள்ளனர். தூத்துக்குடியில் இருந்து நெல்லையில் நடந்த திருமண விழாவிற்கு வந்து கொண்டிருந்தேன். என்னை கைது செய்ததாக பரவிய தகவலையடுத்து பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவுநாள் கூட்டத்திற்கு வந்தவர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் தடியடி நடத்தி அவர்களை அகற்றி இருக்கலாம். துப்பாக்கிச்சூடு நடத்தியது கண்டிக்கத்தக்கது. அப்பாவிகள் 7 பேர் உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது. தனி மனித சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. இம்மானுவேல் சேகரன் விழாவை தடுக்க சிலர் கலவரத்தை தூண்டி விட்டுள்ளனர். இதற்கு முழுக்காரணம் போலீஸ் தான். கலவரம் தொடர்பாக சட்டசபையில் முதல்வர் அளித்த விளக்கம் தவறானது. துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும். அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கலவரம் குறித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி மூலம் விசாரணை நடத்த வேண்டும். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தென் மண்டல ஐ.ஜி., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக முதல்வரை சந்தித்து பேசுவேன். இம்மானுவேல் சேகரனுக்கு அரசு சார்பில் விழா எடுக்க வேண்டும். கலவரத்தில் காயமடைந்து மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறுவேன். இவ்வாறு ஜான் பாண்டியன் தெரிவித்தார்.