தலைமை செயலகம் மாற்றத்திற்கு கண்டனம்
தலைமை செயலகம் மாற்றத்திற்கு கண்டனம்
தலைமை செயலகம் மாற்றத்திற்கு கண்டனம்
UPDATED : ஜூலை 24, 2011 05:12 PM
ADDED : ஜூலை 24, 2011 01:40 PM
சென்னை : தலைமை செயலகத்தை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்து புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றியதற்கு கோவையில் நடைபெற்ற திமுக பொதுக் குழுவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் செம்மொழி நூலகத்தை இரவோடு இரவாக அகற்றியதற்கு அரசியல் வெறுப்புணர்வே காரணமாக எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் முல்லைபெரியார் அணை விவகாரத்தில் தமிழகத்தின் நியாயத்தை நிலைநாட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு துணை நிற்க வேண்டும். சேது சமுத்திர திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை குறைக்க வேண்டும். பட்ஜெட்க்கு முந்தைய வரிகளை தமிழக அரசு குறைக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறுதாவூரில் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்டு ஏழைகளுக்கு வழங்க வேண்டும். தேர்தலில் தி.மு.க., ஓட்டுப்போட்ட மக்களுக்கு நன்றி. இலங்கையில் ஈழத் தமிழர் உரிமையை காக்க பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். போர் குற்றவாளிகளை தண்டிக்க இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் சமச்சீர் கல்வியை சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பிறகும் அமல்படுத்தாத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணா பல்கலை.,யை இணைப்பது கல்வி தரத்தை பாதிக்கும் எனவும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லோக்பால் சட்ட வரம்பில் பிரதமரையும் கொண்டு வர வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.