/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/குஷியில் அ.தி.மு.க., வருத்தத்தில் தே.மு.தி.க.,குஷியில் அ.தி.மு.க., வருத்தத்தில் தே.மு.தி.க.,
குஷியில் அ.தி.மு.க., வருத்தத்தில் தே.மு.தி.க.,
குஷியில் அ.தி.மு.க., வருத்தத்தில் தே.மு.தி.க.,
குஷியில் அ.தி.மு.க., வருத்தத்தில் தே.மு.தி.க.,
ADDED : செப் 23, 2011 11:26 PM
ராமநாதபுரம் : யாருடன் கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் உள்ளாட்சி தேர்தலில் உற்சாகத்துடன் அ.தி.மு.க.,வினர் களமிறங்கி உள்ளனர்.
ஆனால், தே.மு.தி.க.,வினர் தயங்கி வருகின்றனர். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வும், -தே.மு.தி.க.,வும், கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதனால் தே.மு.தி.க., அதிக அளவில் எம்.எல்.ஏ.,க்களை பெற்று பிரதான எதிர்கட்சியாக திகழ்கிறது. உள்ளாட்சி தேர்தலிலும், இந்த கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க.,வின் அதிரடியான வேட்பாளர் பட்டியல் வெளியீடு தே.மு.தி.க.,வினரை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனால் தே.மு.தி.க.,வில் அனைத்து பதவிகளுக்கும் போட்டியிட, மனுதாக்கல் செய்ய தலைமை அறிவுறுத்தியது. இருந்தாலும் எப்படியாவது கூட்டணி அமைக்கப்படும் என்ற தைரியத்தில் இருந்தனர். இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாலும், மேயர் வேட்பாளர்களை தே.மு.தி.க.,வும் அறிவித்துள்ள நிலையில் இனி கூட்டணி தொடருமா என்று தே.மு.தி.க.,வினர் ஏக்கத்தில் உள்ளனர். இதனால் பெரிய தலைகள் எல்லாம் செலவு செய்தாலும் ஜெயிக்க முடியுமா? சீட் கிடைத்தாலும் போட்டியிடலாமா? என தயக்கத்தில் உள்ளனர்.