/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தென்காசி ரயில்வே மேம்பாலம் சர்வீஸ்ரோடு வேலையை வலியுறுத்தி உண்ணாவிரதம்தென்காசி ரயில்வே மேம்பாலம் சர்வீஸ்ரோடு வேலையை வலியுறுத்தி உண்ணாவிரதம்
தென்காசி ரயில்வே மேம்பாலம் சர்வீஸ்ரோடு வேலையை வலியுறுத்தி உண்ணாவிரதம்
தென்காசி ரயில்வே மேம்பாலம் சர்வீஸ்ரோடு வேலையை வலியுறுத்தி உண்ணாவிரதம்
தென்காசி ரயில்வே மேம்பாலம் சர்வீஸ்ரோடு வேலையை வலியுறுத்தி உண்ணாவிரதம்
தென்காசி : தென்காசி ரயில்வே மேம்பாலம் - சர்வீஸ் ரோடு வேலையை வலியுறுத்தி உண்ணாவிரம் இருக்கப்போவதாக தென்காசி வர்த்தக சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தென்காசி வர்த்தக சங்கத்தின் செயற்குழு கூட்டம் பாம்பே ஸ்டோர்ஸ் அதிபர் ராமலிங்கம் தலைமையில் நடந்தது.
மேம்பால வேலை நடைபெற கால தாமதம் ஆகின்ற காரணத்தால் மக்கள் வசதிக்காக சர்வீஸ் ரோட்டை விரைந்து சரிசெய்து மக்கள் பயன்பெறும் வகையில் சர்வீஸ் ரோட்டை முடித்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கோட்டை - திருநெல்வேலி அகல ரயில்பாதை திட்டத்தை விரைந்து முடித்து அத்தடத்தில் ரயில் இயக்க வேண்டும் என்றும் செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதை வேலையை துவங்க வேண்டும் என்றும் அரசை கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மக்கள் பெரிதும் பாதிக்கும் மேம்பால வேலையை சர்வீஸ் ரோடும் சரிசெய்யாமல் வேலையை கிடப்பில் போட்டுள்ளது. சர்வீஸ் ரோடு வேலை செயல்படவில்லை என்றால் தென்காசி வர்த்தக சங்கமும், தென்காசி பகுதியில் உள்ள அனைத்து வணிக சங்கங்களை அணுகி வர்த்தக பெருமக்களை ஒன்று திரட்டி மாபெறும் உண்ணாவிரதம் இருப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
குற்றாலம் ரோட்டில், யானைபாலம் இரண்டு பக்கமும் தடுப்பு கம்பி இரண்டு அடி உயரம் தான் உள்ளது. நடந்து செல்லும் மக்கள் அந்த பக்கமும் நடப்பதற்கு பயப்படுகிறார்கள். ஆகையால் தடுப்பு கம்பி மேலும் மூன்று அடி உயரமாக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறையினரைக் கேட்டுக்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. முடிவில் சங்க செயலாளர் கவிதா மாரியப்பன் நன்றி கூறினார்.