8 விரைவு சாலை திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்
8 விரைவு சாலை திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்
8 விரைவு சாலை திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்
ADDED : ஆக 03, 2024 02:47 AM

புதுடில்லி: ரூ.50,000 கோடி மதிப்பில் 8 தேசிய விரைவுசாலை திட்டத்திற்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது.
நாடுமுழுதும் பெரு நகரங்களை நான்குவழி, ஆறு வழிச்சாலைகளை இணைக்கும் வகையில் 935 கி.மீ. தொலைவிற்கு ரூ. 50 ஆயிரத்து 655 கோடி மதிப்பில் தேசிய விரைவு நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.
இதற்கான ஒப்புதலை நேற்று பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை அளித்தது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தினமும் 4.42 கோடி பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாயப்பு கிடைக்கும்.