திருச்சி இடைத்தேர்தலில் தே.மு.தி.க., போட்டி?
திருச்சி இடைத்தேர்தலில் தே.மு.தி.க., போட்டி?
திருச்சி இடைத்தேர்தலில் தே.மு.தி.க., போட்டி?

திருச்சி: உள்ளாட்சித்தேர்தலில் கழற்றிவிட்ட, அ.தி.மு.க.,வுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில், திருச்சி மேற்குத்தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை, தே.மு.தி.க., கட்சித்தலைவர் விஜயகாந்த் அறிவிப்பாரா என்பது நாளைக்குள் தெரிந்துவிடும்.கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் இணைந்து, தே.மு.தி.க., தேர்தலை சந்தித்தது.
வேறு வழியில்லாத நிலையில், தே.மு.தி.க.,வும் வேட்பாளர்கள் பட்டியலை தனியாக அறிவித்து ஆறுதலை தேடியுள்ளது. போட்டியிடுவதா? வேண்டாமா? என்ற இருவேறு மனநிலையில் கட்சியினர் பரிதவிக்கின்றனர்., தே.மு.தி.க.,வும் தற்போது தயாராகி வருகிறது. அதற்கு தகுந்த களமாக, திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தலை, தே.மு.தி.க., குறி வைத்துள்ளது .
இதுகுறித்து தே.மு.தி.க.,வின் மாநில நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:உள்ளாட்சி பதவிகளை பெற்றுவிடுவதன் மூலம், அ.தி.மு.க.,வுக்கு நிகராக தே.மு.தி.க., வளர்ந்து விடக்கூடாது என்று ஜெயலலிதா பயப்படுவது, வேட்பாளர் பட்டியல் வெளியீடு மூலம் உறுதியாகி விட்டது.
திருச்சி இடைத்தேர்தல் மூலம், தமிழகத்தின் இரண்டாவது பெரிய கட்சி, தே.மு.தி.க.,தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிருபிக்க தயாராக உள்ளோம். எங்கள் எண்ணங்களை தலைமை கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய, நாளை இறுதிநாள் என்பதால், இன்று அல்லது நாளை காலைக்குள் இடைத்தேர்தல் போட்டி அல்லது தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து விஜயகாந்த் அறிவிப்பார்.
சட்டசபை தேர்தலில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு தோற்ற செந்தூரேஸ்வரன், முன்னாள் மாவட்டச்செயலர் சக்ரவர்த்தி, கவுன்சிலர் ஜெரால்டு, மாநில வர்த்தக அணி துணைச்செயலர் விஜயகுமார், மாநகரச்செயலர் விஜயராஜன், மகளிரணிச்செயலர் வக்கீல் சித்ரா உள்ளிட்ட பலர் களமிறங்க காத்திருக்கின்றனர்.


