ADDED : செப் 23, 2011 01:08 AM
ராஜபாளையம் : தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலை போலீசார் தயார் செய்வர்.
பாராளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன், அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்படும். அதற்கான சான்றை போலீசார் வழங்குவர். தேர்தல் முடிந்தவுடன் துப்பாக்கி திருப்பி அளிக்கப்படும். ராஜபாளையம் ஏழு போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இங்கு துப்பாக்கி லைசென்ஸ் பெற்றவர்கள் 70 பேர் உள்ளனர். இவர்கள் துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட ஸ்டேஷன்களில் ஒப்படைக்குமாறு கண்ணன் டி.எஸ்.பி., தெரிவித்துள்ளார்.