Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது மலேசியா!

பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது மலேசியா!

பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது மலேசியா!

பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது மலேசியா!

Latest Tamil News
மலேசியா: இந்தியாவுக்கு எதிராக மலேசியா அரசாங்கத்துக்கு பாகிஸ்தான் நயவஞ்சகமாக கடிதம் எழுதி இருக்கிறது. அதை மலேசிய அரசு ஏற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் வெடித்தது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை இந்தியா குண்டு வீசி தகர்த்தது. சண்டைக்கு வந்த பாகிஸ்தானின் ராணுவ தளங்களையும் ஏவுகணைகளை வீசி சிதைத்தது. 4 நாட்கள் நடந்த போரில் இந்தியாவின் பதிலடியை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் சரண் அடைந்தது.

பயங்கரவாதிகளை வளர்த்தெடுக்கும் பாகிஸ்தானின் முகத்தை தோலுரித்து காட்டவும், இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை புரிய வைக்கவும் 33 நாடுகளுக்கு அனைத்து கட்சி எம்பிக்கள் குழுக்களை இந்தியா அனுப்பி வைத்தது. ஜேடியு எம்பி சஞ்சய் ஜா தலைமையிலான 9 எம்பிக்கள் குழு, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், இந்தோனேசியா நாடுகளை தொடர்ந்து கடைசி நாடாக சனிக்கிழமை மலேசியா வந்திறங்கியது.

மலேசியாவின் மக்கள் நீதி கட்சி தலைவர்கள், அரசாங்க தலைவர்கள், சபாநாயகர் ஜோகாரி அப்துல் உட்பட பல தலைவர்களை சந்தித்து பேசினர். ஆபரேஷன் சிந்தூரில் என்ன நடந்தது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் செய்த கொடூர சம்பவங்கள் என்னென்ன, இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை நம் குழுவினர் விளக்கினர்.

அதே போல் இந்திய வம்சாவளியினர் மத்தியிலும் பேசினர். அப்போது, ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீண்டும் இந்தியாவுடன் பாகிஸ்தான் ஒப்படைக்க முன்வந்தால் மட்டுமே அதனுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றனர். மலேசியா சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு, நம் குழுவினர் நாடு திரும்பி விட்டனர்.

கடிதம்

இந்நிலையில் தான் பாகிஸ்தான் பார்த்த ஒரு சதி வேலை இப்போது வெளியாகி அதிர வைத்துள்ளது. அதாவது, நம் குழுவினர் போகும் முன்பு மலேசியா அரசாங்கத்துக்கு பாகிஸ்தான் நயவஞ்சகமாக கடிதம் எழுதி இருக்கிறது.

அதில், ‛ஐ.நா.,வில் காஷ்மீர் விஷயம் இருக்கிறது. எனவே இந்திய தூதுக்குழுவினரின் 10 நிகழ்ச்சிகளையும் மலேசியா அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும். நாங்கள் ஒரு முஸ்லிம் நாடு. நீங்களும் முஸ்லிம் நாடு தான். எனவே இந்திய குழுவினரின் பேச்சை கேட்காதீர்கள். அவர்களது நிகழ்ச்சிகளை ரத்து செய்யுங்கள்' என்று பாகிஸ்தான் சொல்லி இருக்கிறது.

பாகிஸ்தான் சொல்வது போல் மலேசியாவில் முஸ்லிம்கள் தான் மெஜாரிட்டி. கிட்டத்தட்ட 65 சதவீதம் பேர் முஸ்லிம்கள். அனைவருமே சன்னி முஸ்லிம் தான். பாகிஸ்தானில் மெஜாரிட்டியாக இருப்பவர்களும் சன்னி முஸ்லிம்கள் தான். எனவே தான், தங்கள் பயங்கரவாத முகத்தை மறைக்க பாகிஸ்தான் மதத்தை ஆயுதமாக கையில் எடுத்தது.

ஏற்க மறுப்பு

ஆனால் அது எடுபடவில்லை. பாகிஸ்தானின் நயவஞ்சக செயலை மலேசியா அரசாங்கம் ஏற்காமல் இந்தியா பக்கம் நின்றது. பாகிஸ்தான் கடிதத்தை முற்றிலும் நிராகரித்தது. இந்தியாவின் தூது குழுவினருக்கு பச்சைக்கொடி காட்டியது.

'நாங்களும் முஸ்லிம் நாடு நீங்களும் முஸ்லிம் நாடு' என்ற பாகிஸ்தானின் நயவஞ்சகம் நொறுங்கிப்போனது. மூக்குடைந்து நிற்கும் நிலைமையை பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us