அந்தியூர்: அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவாக, மனித சங்கிலி மற்றும் மெழுவர்த்தி ஏந்தி அந்தியூரில் போராட்டம் நடந்தது.
அந்தியூர், தவிட்டுப்பாளையத்தில் பொதுநல அமைப்பினர் இணைந்து, மனித சங்கிலி மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தியூர் யூனியன் அலுவலகத்திலிருந்து துவங்கிய மெழுகுவர்த்தி ஏந்திய மனித சங்கிலி, பத்ரகாளியம்மன் கோவில் வரை நீண்டிருந்தது. ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு தட்டிகளுடன் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


