தாய்லாந்தில் இந்தியரை கடித்து குதறிய புலி
தாய்லாந்தில் இந்தியரை கடித்து குதறிய புலி
தாய்லாந்தில் இந்தியரை கடித்து குதறிய புலி
ADDED : மே 31, 2025 04:25 AM

பேங்காக்: தாய்லாந்தில் உள்ள தனியார் உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணியருடன் பழக பயிற்சியளிக்கப்பட்ட புலி திடீரென கோபமடைந்து இந்திய சுற்றுலா பயணியை கடித்து குதறியது.
தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் புக்கட் தீவு சர்வதேச சுற்றுலா பயணியரை ஈர்க்கும் இடமாக உள்ளது. இங்கு அழகிய கடற்கரைகள், நீர் சாகச விளையாட்டுகள், உள்ளூர் சந்தை, வனவிலங்குகளுடன் பழகும் உயிரியல் பூங்காக்கள் உள்ளன.
'டைகர் கிங்டம்' என்ற பெயரில் தனியார் உயிரியல் பூங்கா புக்கட்டில் உள்ளது. இதில் பல்வேறு வயது மற்றும் அளவு உள்ள புலிகள் மற்றும் சிறுத்தைகள் உள்ளன. தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணியர் கட்டணம் செலுத்தி இந்த உயிரியல் பூங்காவுக்கு செல்கின்றனர்.
அங்கு உள்ள புலிகளை தொட்டு பார்க்கலாம், வாக்கிங் அழைத்துச் செல்லலாம், புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். அவை அதற்கு ஏற்ப குட்டிகளிலேயே பயிற்சி அளிக்கப்பட்டவை. இதனால் சாந்தமாக பூனைக்குட்டி போலவே இருக்கும்.
இந்நிலையில் சமீபத்தில் டைகர் கிங்டம் உயிரியல் பூங்காவுக்கு சென்ற இந்தியர், அங்கு உள்ள மிகப்பெரிய புலியை வாக்கிங் அழைத்துச் சென்றார். அதன் முதுகில் தட்டிக்கொடுத்த படி நடந்தார். உடன் புலியின் பயிற்சியாளரும் வந்தார்.
புகைப்படம் எடுப்பதற்காக புலி மீது கை போட்டு அமர்ந்த போது ஆத்திரமடைந்த புலி அவரை கீழே தள்ளி கடித்தது. அவர் பயத்தில் கதறினார். பயிற்சியாளர் போராடி புலியை கட்டுப்படுத்தினார். இதனால் லேசான காயங்களுடன் சுற்றுலா பயணி உயிர் தப்பினார்.