Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/தஞ்சையில் நாணயவியல் கண்காட்சி துவக்கம்

தஞ்சையில் நாணயவியல் கண்காட்சி துவக்கம்

தஞ்சையில் நாணயவியல் கண்காட்சி துவக்கம்

தஞ்சையில் நாணயவியல் கண்காட்சி துவக்கம்

ADDED : ஆக 19, 2011 11:31 PM


Google News
தஞ்சாவூர்: சோழமண்டல நாணயவியல் கழகம் சார்பில் 12வது நாணய கண்காட்சி தஞ்சாவூர் சங்கீத மகாலில் நேற்று துவங்கியது.

சோழ மண்டல நாணயவியல் கழக நிறுவனர் துரைராசு வரவேற்றார். மூன்று நாட்கள் நடக்கும் இக்கண்காட்சியை பரிசுத்தம் அறிவியல் தொழில்நுட்ப கல்லூரி தலைவர் அந்தோணிசாமி திறந்து வைத்தார். நாகை மாவட்ட வன அலுவலர் சவுந்தரபாண்டியன் குத்து விளக்கேற்றினார். சோழ மண்டல நாணயவியல் கழக தலைவர் வள்ளிநாயகம் தலைமை வகித்தார். செயலாளர் சாமிநாதன் ஆண்டறிக்கை வாசித்தார். சோழமண்டல நாணயவியல் கழக நிர்வாகி ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். திருப்பூர், கோவை, ஊட்டி நாணயவியல் கழகங்களின் செயலாளர் பழனிச்சாமி வாழ்த்தி பேசினார்.தென்னாட்டில் வழக்கில் முதல் வகை செம்பு, வெள்ளி முத்திரை நாணயங்கள். சங்க கால சேர, சோழ, பாண்டியர் நாணயங்கள், சாதவாகனர், பல்லவ மன்னர்களின் நாணயங்கள், பிற்கால சேர சோழ பாண்டியர்களின் நாணயங்கள். விஜய நகர பேரரசு, தென்னக நாயக்க மன்னர்களின் நாணயங்கள். தஞ்சாவூர் செஞ்சி, ஆரணி மராட்டிய மன்னர்களின் நாணயங்கள். ஆற்காடு நவாப்புகள்,ஹைதர் அலி, திப்பு சுல்தான், மைசூர் உடையர், ஹைதராபாத் நிஜாம், மைசூர் மகராஜா நாணயங்கள். திருவாங்கூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை சமஸ்தானங்கள் வெளியிட்ட நாணயங்கள். சுதந்திர இந்தியாவின் சிறப்பு வெளியீடுகளான நினைவு நாணயங்கள், ரஷ்ய ஜார் மன்னர்கள், ஜெர்மன் ஹிட்லர் ஆட்சிக்கால அரிய பணத்தாள்கள், பிளாஸ்டிக் கரன்சி மற்றும் கோல்டு கரன்சி நோட்டுகள். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வெளிவந்துள்ள அரிய அஞ்சல் தலைகள், அஞ்சல் அட்டைகள், அஞ்சல் உறைகள், பிளாஸ்டிக் மற்றும் உலோக அஞ்சல் தலைகள். உலகம் முழுவதும் வெளியிடப்பட்ட இந்திய தலைவர்களான காந்தி, நேரு, இந்திரா நினைவு அஞ்சல் தலைகள், போர்ப்பதக்கங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இன்று 20ம் தேதி காலை பத்து மணிக்கு பள்ளி மாணவர்களுக்கான நாணயவியல் கல்வி வினாடி வினா நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு நாளை ஞாயிறு மாலை நடக்கும் நிறைவு விழா பரிசுகள் வழங்கப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us