மத்திய அரசை நிர்பந்திக்கிறார் ஹசாரே: பிரதமர் ஆதங்கம்
மத்திய அரசை நிர்பந்திக்கிறார் ஹசாரே: பிரதமர் ஆதங்கம்
மத்திய அரசை நிர்பந்திக்கிறார் ஹசாரே: பிரதமர் ஆதங்கம்

புதுடில்லி: லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டதையும் பொருட்படுத்தாமல், தன்னுடைய ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசை ஹசாரே நிர்பந்தப்படுத்துவதாக பிரதமர் மன்மேகான் சிங் தெரிவித்தார்.
வலிமையான லோக்பால் மசோதாவை உருவாக்கக்கோரி, காந்தியவாதி அன்னா ஹசாரேவும் அவரது ஆதரவாளர்களும் உண்ணாவிரதப்போராட்டத்தை அறிவித்தனர். இதையடுத்து நேற்று காலை டில்லியில் அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டார். அவரைத்தொடர்ந்து அவரது ஆதரவாளர்களான அரவிந்த் கெஜ்ரிவால், சாந்தி பூஷன், கிரண்பேடி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். சாந்தி பூஷன் மற்றும் கிரண்பேடி ஆகியோர் நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அன்னா ஹசாரே வடக்கு டில்லியில் உள்ள ஆபிசர்ஸ் மெஸ்சில் தங்க வைக்கப்பட்டார். அங்கு சென்ற நீதிபதிகள், ஹசாரேவிடம் சில உறுதிமொழிகள் கோர, அதை ஹசாரே மறுத்ததையடுத்து, அவரை 7 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர். அவருடன் கெஜ்ரிவாலும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், ஹசாரே கைது செய்யப்பட்டதைக்கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பல்வேறு நகரங்களில் ஹசாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதப்போராட்டம் நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பல்வேறு நகரங்களில் வக்கீல்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.டில்லியில் இன்று மதியம் ஹசாரேவுக்கு ஆதரவாக ஆட்டோ டிரைவர்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளனர். இதே போல், டில்லியில் சுப்ரீம் கோர்ட் வளாகத்திலிருந்து இந்தியா கேட் வரை வக்கீல்கள் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். மும்பையின் அந்தேரி பகுதியில் இன்று மாலை ஹசாரேவுக்கு ஆதரவாக தீப ஊர்வலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்., உயர்நிலைக்குழு: அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக நாடு முழுவதும் எழுந்துள்ள அலையைப்பார்த்து மிரண்டு போயுள்ள காங்., இன்று காலை உயர்நிலைக்குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல், சிதம்பரம், பிரணாப், அந்தோணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அன்னா ஹசாரே கைது தொடர்பாக பிரதமர் விளக்கமளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, முதலில் லோக்சபாவிலும் பின்னர் ராஜ்யசபாவிலும் பிரதமர் விளக்கமளித்தார்.
பிரதமர் விளக்கம்: லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டதையும் பொருட்படுத்தாமல், தன்னுடைய ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசை ஹசாரே நிர்பந்தப்படுத்துவதாக பிரதமர் மன்மேகான் சிங் தெரிவித்தார். ஹசாரே கைது தொடர்பாக லோக்சபாவில் அறிக்கை ஒன்றை வாசித்த அவர், அன்னா ஹசாரே கைது தொடர்பாக நேற்று நடந்த சம்பவங்கள் மிகவும் வருத்தமளிக்கின்றன என்று தெரிவித்தார். அன்னா ஹசாரேவும் அவரது இளம் ஆதரவாளர்களும் ஜன்லோக்பால் மசோதா பார்லிமென்டில் நிறைவேறவேண்டும் என விரும்புகின்றனர். லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டதையும் பொருட்படுத்தாமல், தன்னுடைய ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என ஹசாரே நிர்பந்தப்படுத்துகிறார் என்றும் தெரிவித்தார். கடந்த 15ம்தேதி, போலீசார் விதித்த 6 நிபந்தனைகளை ஹசாரே ஏற்கவில்லை. இதையடுத்து அவரை கைது செய்வதைத்தவிர டில்லி போலீசாருக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் குறித்து கவலையில்லை. இதனை மத்திய அரசு எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.


