Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ராமநாதபுரம், நெல்லை சரக டி.ஐ.ஜி.,க்கள் உள்ளிட்ட ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

ராமநாதபுரம், நெல்லை சரக டி.ஐ.ஜி.,க்கள் உள்ளிட்ட ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

ராமநாதபுரம், நெல்லை சரக டி.ஐ.ஜி.,க்கள் உள்ளிட்ட ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

ராமநாதபுரம், நெல்லை சரக டி.ஐ.ஜி.,க்கள் உள்ளிட்ட ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

UPDATED : மார் 25, 2025 04:28 PMADDED : மார் 25, 2025 04:24 PM


Google News
Latest Tamil News
சென்னை: ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி., நெல்லை சரக டி.ஐ.ஜி., உள்ளிட்ட ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். முன்னாள் போலீஸ் அதிகாரி ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்ட நிலையில், நெல்லை சரக டி.ஐ.ஜி., இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ் குமார் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி., அபிநவ் குமார் - மதுரை சரக டி.ஐ.ஜி., ஆகவும்

திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி., மூர்த்தி - ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.,ஆகவும்

திருநெல்வேலி போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமானிக்கு கூடுதலாக நெல்லை சரக டி.ஐ.ஜி., பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்.

திருப்பூர் சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் சுஜாதா- ஈரோடு எஸ்.பி., ஆகவும்

ஈரோடு எஸ்பி ஜவஹர்- சிபிசிஐடி வடக்கு மண்டல எஸ்.பி. ஆகவும்

சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சக்திவேல் - சென்னை போலீசின் உளவுப்பிரிவின் துணை கமிஷனர் ஆகவும்

சென்னை கிழக்கு போக்குவரத்து துணை கமிஷனர் பாஸ்கரன் - சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ஆகவும்

சென்னை போலீசின் நலன் மற்றும் எஸ்டேட் பிரிவு துணை கமிஷனர் மேகலினா ஐடன்- சென்னை கிழக்கு போக்குவரத்து துணை கமிஷனர் ஆகவும்

சென்னை மைலாப்பூர் துணை கமிஷனர் ஹரி கிரண் பிரசாத் - சென்னை போலீசின் நலன் மற்றும் எஸ்டேட் பிரிவு ணை கமிஷனர் ஆகவும்

பழநி,தமிழக போலீஸ் சிறப்பு படை பிரிவு 14வதுபட்டாலியன் கமாண்டன்ட் கார்த்திக் - சென்னை மைலாப்பூர் துணை கமிஷனர் ஆகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us